ஐநா பொதுச்சபையின் 77ஆவது உச்சி மாநாடு சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அதன்படி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் தனது உரையில் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து முக்கிய கருத்தைகளை பேசினார். அமைதியை பாகிஸ்தான் தரப்பு விரும்பவுதாகவும் இந்தியாவும் அதை நோக்கி நகர வேண்டும் என்பதே அவரின் உரையின் சாரமாக இருந்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுதான் இரு நாடுகளின் அமைதிக்கு பாதகமாக இருப்பதாகவும் அவர் தனது உரையில் கூறியிருந்தார்.
இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இதில் பாகிஸ்தான் தரப்பு பதில் அளித்து இந்தியா தரப்பின் கருத்துக்களை முன்வைத்து ஜெய்சங்கர் பேசினார். ஜெய்சங்கர் தனது உரையில், "இந்தியா பல ஆண்டுகளாக அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. எனவே, பயங்கரவாத விவகாரத்தில் இந்தியா துளி கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இதற்கு பாகிஸ்தான் எந்த நியாமும் கூற முடியாது. எவ்வளவு சாமர்த்தியமாக வெற்று கோஷங்கள் பேசினாலும், கையில் இருக்கும் ரத்த கறைகளை யாராலும் மறைக்க முடியாது" என்றார்.
மேலும் ஜெய்சங்கர் தனது உரையில் பாகிஸ்தானை மட்டுமல்லாது சீனாவையும் தாக்கியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு தடை விதித்து தீர்மானங்களை இந்தியா கொண்டுவரும்போது அதை ஐநா சபையில் சீனா தடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் சிறந்த நபர் தான், ஆனால்.. விவாதமாகும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து
இதை சுட்டிக்காட்டி இரு நாடுகளும் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவதை ஐநா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கவனிக்காமல் இல்லை என்றார். உக்ரைன் போர் குறித்து பேசிய ஜெய்சங்கர், இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாகவும், இரு தரப்பும் பேசி விரைவாக தீர்வை எட்டுவதையே இந்தியா விரும்புகிறது எனவும் அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: External Minister jaishankar, India and Pakistan, United Nation