இந்தியாவில் கடந்த 30 நாட்களாக பெட்ரோல், டீசல் எவ்வித விலை மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலையின் ஏற்படும் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 31வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இந்தியாவில் கடைசியாக பெட்ரோல் விலை ஜூலை 17ம் தேதியும் டீசல் விலை ஜூலை 15ம் தேதியும் உயர்த்தப்பட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.84க்கும் கொல்கத்தாவில் ரூ.102.08க்கும், மும்பையில் 107.83க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல் விலை மீதான வரியில் ரூ.3ஐ தமிழக அரசு குறைத்தது. இதன் காரணமாக சென்னையில் பெட்ரோல் விலை நூறு ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது - நிர்மலா சீதாராமன்
குர்கானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.46க்கும் நொய்டாவில் ரூ.99.14க்கும் பெங்களூருவில் ரூ.105.25க்கும் புபனேஸ்வரில் ரூ.102.66க்கும். சண்டிகார்க்கில் ரூ.99.93க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: சட்டங்களில் தெளிவு இல்லை- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
டீசலை பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகமாக ஜெய்ப்பூரில் லிட்டருக்கு ரூ.99.02க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹைதராபாத்தில் ரூ.97.96க்கும், புபனேஸ்வரில் ரூ.97.95க்கும் மும்பையில் ரூ.97.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Petrol Diesel Price