2ஜி வழக்கின் தீர்ப்பில் எனக்கு வருத்தம் இல்லை - வினோத் ராய்

தலைமை கணக்கு தணிக்கையாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற வினோத் ராய், பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: September 11, 2019, 12:23 PM IST
2ஜி வழக்கின் தீர்ப்பில் எனக்கு வருத்தம் இல்லை - வினோத் ராய்
வினோத் ராய்
news18
Updated: September 11, 2019, 12:23 PM IST
2 ஜி வழக்கு சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே நடந்தது என்று முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் நியூஸ் 18 தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஐந்தாண்டில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், அறிக்கை அளித்தார். இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது.

2018-ம் ஆண்டு இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டனர். குறிப்பாக இந்த தீர்ப்பில், சிபிஐ-யின் செயல்பாடுகளை நீதிபதி விமர்சித்திருந்தார். எந்த விதமான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்நிலையில், வினோத் ராய் நியூஸ் 18 குழுமத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், “2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இழப்பீடு குறித்து கணக்கிடுவதில் சிஏஜி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணை முற்றிலும் மாறுபட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக எனது தலைமையில் சிஏஜி நடத்திய விசாரணையில் எந்தவித தவறும் இல்லை. எங்களது பணி அரசின் ஆவணங்கள் மூலம் தரவுகளை சரிபார்ப்பது. நாங்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கணக்கிட்ட இழப்பு மிகவும் சரியானது.

ஆ.ராசா உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் சிபிஐ நீதிமன்றம் வழக்கை முன்னெடுத்து சென்றது. ஆனால் இறுதியில் சிபிஐ தரப்பே உரிய ஆதாரங்களை சமர்பிக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது” என்று கூறினார்.

தலைமை கணக்கு தணிக்கையாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற வினோத் ராய், பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...