16 வயது சிறுமியுடன் உடலுறவு வைத்த 22 வயது நபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று தெரிவித்த கல்கத்தா உயர் நீதிமன்றம், அந்த நபரையும் விடுதலை செய்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 22 வயது நபர் 16 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து இளைஞர் தரப்பில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா முன்பான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் கூற்றுப்படி, ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு (penetrative sexual offence) ஒரு நபரை குற்றவாளியாக்க, பாதிக்கப்பட்டவரின் மனநிலை, முதிர்ச்சி மற்றும் முந்தைய நடத்தை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போக்சோ சட்டம் தொடர்பான விதிகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஒரு சரியான கட்டமைப்பாக இருக்க வேண்டும் மாறாக ஒரு நபர் மற்றவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாக இருக்கக் கூடாது” என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - லாலு பிரசாத் யாதவ்
இளைஞருடன் ஏற்கனவே தொடர்பு இருப்பதை பாதிக்கப்பட்ட சிறுமி ஒப்புக்கொண்டதையும் மனுதாரர் தரப்பில் மேற்கொள் கட்டப்பட்டது. அப்போது அவர் மைனர் என்பதால் அவர் விரும்பி இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாதுஎன்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ’போக்சோ சட்டத்தின் பிரிவு 2 (d) ல் 'குழந்தை' என்ற வரையறையை கருத்தில் கொண்டு, 17 வயது மற்றும் 364 நாட்கள் வயதுடைய ஒருவர் கூட குழந்தையாக தகுதி பெறுவார். ஆனால் 18 வயது நிரம்பியவருக்கும் அவருக்கும் உள்ள முதிர்ச்சியில் பெரிய வேறுபாடு இருக்காது’ என்று தெரிவித்த நீதிமன்றம், இருவருக்கும் இடையேயான சேர்க்கை இயற்கையான முறையில் இருக்கும்போது ஆண்கள் மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல.
இதையும் படிக்க: குஜராத் துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்
இந்த வழக்கில் இளைஞர் கட்டாயப்படுத்து வல்லுறவில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில், இருவரும் முன்பே உறவு இருப்பது இந்த வழக்கில் தெரியவந்துள்ளது. இளைஞர், சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததாலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது என்று கூறிய நீதிமன்றம் இளைஞரை விடுதலை செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: HighCourt, Kolkatta, POCSO case