”இந்த மூன்று விஷயங்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்...” ராகுல் காந்தி

”இந்த மூன்று விஷயங்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்...” ராகுல் காந்தி
ராகுல் காந்தி - நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: December 13, 2019, 2:28 PM IST
  • Share this:
பாலியல் வன்கொடுமைகள் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி மூன்று விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா என முழக்கமிட்ட பாஜக ஆட்சியில் இந்தியா தற்போது ரேப் இன் இந்தியா ஆகிவிட்டதாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாட்டில் அதிகரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் வாகனத்தால் மோதப்பட்டபோதும் பிரதமர் மோடி அமைதி காப்பதாகவும் கூறினார்.


இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியதுமே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். ராகுல் காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என இரு அவைகளிலும் முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் முழக்கமிட்டதால் இரு அவையிலும் அமளி ஏற்பட்டது.

இது பற்றி பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இந்திய பெண்களை பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாக்குமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

எனினும் தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கோர முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். குடியுரிமை சட்ட விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டத்தை திசை திருப்பவே பாஜக போராடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ட்விட்டரில் மூன்று விஷயங்களை குறிப்பிட்டு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிவதற்கு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்கு மற்றும் டெல்லி பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இருப்பதாக 2014 தேர்தல் பிரசாரத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி பேசிய வீடியோவையும் பதிவிட்டு, மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading