அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்கப்படுகிறதா..?

’நேர்மை இன்மை, திறன் இன்மை ஆகியவற்றின் கீழ் ஒரு பணியாளர் ஓய்வு வயதுக்கு முன்னரே பணியிலிருந்து நீக்கப்படலாம்.’

அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்கப்படுகிறதா..?
ஜிதேந்திர சிங்
  • News18
  • Last Updated: November 27, 2019, 7:01 PM IST
  • Share this:
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60 வயதிலிருந்து 58 ஆகக் குறைய வாய்ப்பில்லை என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் விளக்கம் அளித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 2020 முதல் ஓய்வு வயது குறைக்கப்பட அரசு முடிவு செய்துள்ளதாக தவறான செய்தி ஒன்று பரவியது. ஓய்வு வயதைக் குறைக்கப் போவதில்லை என அரசு தற்போது விளக்கியுள்ளது.

தவறான செய்தி குறித்து எம்.பி-க்கள் கெளஷல் கிஷோர் மற்றும் உபேந்திரா சிங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த இணை அமைச்சர் ஜிதேந்திரா, “60 வயதிலிருந்து 58 வயதாக ஓய்வு வயதைக் குறைக்க எண்ணமில்லை. அதேபோல் 50 வயது ஆன மத்திய அரசு ஊழியர்களை கட்டாயப் பணி நீக்கம் செய்யும் எண்ணமும் இல்லை. ஆனால், நேர்மை இன்மை, திறன் இன்மை ஆகியவற்றின் கீழ் ஒரு பணியாளர் ஓய்வு வயதுக்கு முன்னரே பணியிலிருந்து நீக்கப்படலாம்.

அதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பிய பின்னர்தான் செய்யப்படும்” என்று விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

மேலும் பார்க்க: போக்குவரத்து விதிமீறலைத் தடுக்க போலீஸ் பொம்மைகளை சாலைகளில் நிறுத்திய காவல்துறை..!
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்