நாடாளுமன்றத்தின் அவைகளில் நடைபெறும் விவாதங்களின் தரம் குறைந்துள்ளதாகவும் இயற்றப்படும் சட்டங்களில் தெளிவு இல்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்து கொண்டு வருவதாகவும் விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வேதனை தருவதாகவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களில் தெளிவு இல்லை, இந்த சட்டங்களின் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. இவை மக்களுக்கு ஏற்படும் இழப்பு. வழக்கறிஞர்களும் அறிவுஜீவிகளும் அவையில் இல்லாததால் இவ்வாறு ஏற்படுகிறது’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிங்க: தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.... சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
“ நமது சுதந்திர போராட்ட வீரர்களில் பலர் சட்டம் பயின்றவர்களாக இருந்தனர். மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான முதல் உறுப்பினர்கள் வழக்கறிஞர்களாக இருந்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன? அப்போது எல்லாம் நாடாளுமன்ற அவைகளில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.
நிதி மசோதாக்கள் தொடர்பான விவாதங்களை பார்த்துள்ளேன். மிகவும் ஆக்கப்பூர்வ குறிப்புகள் இடம்பெறும். சட்டங்கள் குறித்து ஆராயப்படும், விவாதிக்கப்படும். சட்டங்கள் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற அவையின் பங்கை ஒருவர் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நாட்டின் உள்கட்டமைப்பை வலுபடுத்துவோம்: பிரதமர் மோடி
வழக்கறிஞர்கள் சட்ட சேவையில் மட்டும் ஈடுபடாமல் பொதுசேவையிலும் ஈடுபட வேண்டும் என்றும் அறிவையும் ஞானத்தையும் நாட்டுக்காக பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.