வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராஜ் போட்டி!

பிரதமர் மோடி நாளை வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

news18
Updated: April 25, 2019, 1:01 PM IST
வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராஜ் போட்டி!
மோடி - பிரியங்கா
news18
Updated: April 25, 2019, 1:01 PM IST
வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அஜய் ராஜ் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு நான்காவது கட்டமான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நாளை வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

பிரமாண்ட பேரணியாக சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று பாஜக அறிவித்துள்ளது. இதற்கிடையே, வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் என்று பேசப்பட்டது.


இந்த தகவலை அக்கட்சி எந்த இடத்திலும் மறுக்கவில்லை. இந்நிலையில், பிரியங்கா காந்தி போட்டி என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி அஜய் ராஜ் என்பவரை இன்று வாரணாசி வேட்பாளராக அறிவித்துள்ளது.

First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...