Home /News /national /

எந்தவொரு அரசியல் கட்சியும் இலவசங்களை ஒருபோதும் எதிர்க்காது: உச்ச நீதிமன்றம்

எந்தவொரு அரசியல் கட்சியும் இலவசங்களை ஒருபோதும் எதிர்க்காது: உச்ச நீதிமன்றம்

இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க முடியாத அளவில் எதிர்கால பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க முடியாத அளவில் எதிர்கால பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க முடியாத அளவில் எதிர்கால பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எந்தவொரு அரசியல் கட்சியும் இலவசங்களை ஒருபோதும் எதிர்க்காது என்றும், யாரும் இந்த பிரச்சினையை விவாதிக்க முன்வர மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் சாத்தியமற்ற இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்கு சமம். இது வாக்காளர்களை மறைமுகமாக நிர்பந்திக்கும் செயல். அதனால், அரசியல் கட்சிகள் இலவசங்களை ஒழுங்குப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்து பொதுநல வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேர்தலுக்கு முன்னும், தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் கையாண்ட சமாச்சாரங்களைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை உருவாக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    மனுதாரரின் கோரிக்கையின் பேரில், நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அத்தகைய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் தங்கள் பரிந்துரைகளை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    இதனிடையே, பாஜக தலைமையிலான மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு எதிரான பொதுநல வழக்கை ஆதரித்துள்ளது. இது போன்ற இலவசங்கள் வழங்குவது எதிர்காலத்தில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க முடியாத அளவில் எதிர்கால பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தான் கையாள வேண்டும் என்று மத்திய அரசு முன்பு கூறியிருந்தது. எனினும், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் தலையிட முடியாது என்று அப்போதே திட்டவட்டமாக கூறியது.

    இதைத்தொடர்ந்து, மத்திய அரசு, நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Supreme court

    அடுத்த செய்தி