பயணிகள் ரயில்சேவையை தொடங்கும் திட்டம் தற்போது இல்லை - ரயில்வேதுறை விளக்கம்

பயணிகள் ரயில்சேவையை தொடங்கும் திட்டம் தற்போது இல்லை - ரயில்வேதுறை விளக்கம்
  • Share this:
பயணிகள் ரயில்சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தொடர்பான திட்டம் ஏதும் தற்போது இல்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனையடுத்து, ஊரடங்கு உத்தரவு முழுவதும் நீக்கப்படுமா? அல்லது தொடருமா? அல்லது பகுதியாக நீக்கப்படுமா? என்பது குறித்த குழப்பங்கள் மக்களிடையே நீடித்துவருகின்றன.

இதற்கிடையில், ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து ரயிலுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, ரயில் முன்பதிவு தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், ரயில்கள் குறித்த விவரங்களும் பணியாளர்களை வேலை வரச் சொல்லி அழைப்புகளும் வந்துவிட்டன என்று செய்திகள் வெளியாகின.


இந்தநிலையில், இதுகுறித்த ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில், ‘பல ஊடகங்களில் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுவது குறித்து ரயில்கள் விவரங்கள், நேரங்களுடன் செய்திகள் வெளியாகின. பயணிகள் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து வெளியான செய்திகள் தொடர்பான திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த முடிவுகள் எடுக்கப்பட்டப் பிறகு முறையாக அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.


Also see:

 
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading