நாட்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியில், "ஒரு ஆணும் பெண்ணும் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவு( செக்ஸ் ) கொள்வதற்கான வயது தற்போது 18 என உள்ளது. அதை 16ஆக குறைக்கும் எண்ணம் உள்ளதா " என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, Consent sex எனப்படும் சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயதை 18 இல் இருந்து குறைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குற்றங்களில் இருந்து பாதுகாக்கவே போக்சோ சட்டம் 2012இல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்று தான் வரையறை செய்துள்ளது.
1875இல் இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999இல் திருத்தம் செய்யப்பட்டது. இதில் வயது முதிர்ச்சிக்கான வயதாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே,சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயதை 18க்கும் கீழ் குறைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி ஷூ லேஸ் கட்டிவிட சொன்னாரா? உண்மையை ஆதாரத்துடன் விளக்கிய முன்னாள் அமைச்சர்
மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரப்படி குழந்தை திருமணம் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்கும் அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில்," நாட்டில் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குழந்தை திருமணம் சார்ந்த புகார் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன. எனவே, குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது என் நாம் கவலைபட தேவையில்லை என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sex, Smriti Irani