அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு இல்லை?

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு இல்லை?
அரவிந்த் கெஜ்ரிவால்
  • News18
  • Last Updated: February 14, 2020, 7:45 AM IST
  • Share this:
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், 3-வது முறையாக பதவியேற்கும் விழா வரும் 16ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க பிற மாநில முதலமைச்சர்களுக்கோ, பிற மாநில அரசியல் தலைவர்களோ அழைக்கப்படவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அரவிந்த் கெஜ்ரிவால் போல வேடமிட்டு வந்து உள்ளங்களை வென்ற சிறுவனுக்கு, பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்