ஹோம் /நியூஸ் /இந்தியா /

வரலாற்றை திருத்தி எழுதுவோம்... நம்மை யாரும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் அமித்ஷா

வரலாற்றை திருத்தி எழுதுவோம்... நம்மை யாரும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நாட்டில் 150 ஆண்டு காலம் ஆட்சி செய்த 30 பேரரசுகளை ஆய்வு செய்து அதன் வரலாற்றை எழுத மத்திய அமைச்சர் அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அசாமைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு போர் தளபதியான லசித் போர்புகான் என்பவரின் 400ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவர் அசாம் நாட்டின் அஹோம் அரசின் முன்னணி போர் வீரராக திகழ்ந்தவர். இவரின் 400ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 3 நாள் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

  அதில் அமித் ஷா இந்தியாவின் வரலாறு குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் ஒரு வரலாற்று மாணவன். நமது வரலாறு முறையாக நமக்கு கூறப்படவில்லை. திரிக்கப்பட்ட வரலாறே கூறப்படுகிறது என்று பல காலமாக பேசி வருகிறோம். இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், அதை சரி செய்ய வேண்டிய காலம் இது. நமது வரலாற்று உண்மைகளை கூறுவதை யாரால் தடுக்க முடியும். எனவே, இங்கு குழுமி இருக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாட்டில் 150 ஆண்டு காலம் ஆட்சி செய்த 30 பேரரசுகளை ஆய்வு செய்யுங்கள். அதேபோல், விடுதலைக்காக போராடிய 300 வீரர்களை கண்டறிந்து ஆய்வு செய்யுங்கள்.

  இதையும் படிங்க: வேலையில் ஒழுங்கீனம்..மூன்று நாள்களுக்கு ஒரு ரயில்வே ஊழியர் பணியில் இருந்து நீக்கம்!

  உண்மையை ஆய்வு செய்து வரலாற்றை திருத்தி எழுதுங்கள். இந்த ஆய்வுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. இதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு நாம் ஊக்கம் தர முடியும். சாரிகாட் போரில் முகலாயர்களை தடுத்து நிறுத்தி வெற்றி கண்ட வீரர் லசித். அவரின் வீரம் மிக்க வரலாற்றை குறைந்தது 10 மொழிகளில் மொழிபெயர்த்து மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். இதை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் லசித்தின் வீரம் தெரிய வேண்டும்" என்றார். லசித்தின் 400ஆவது பிறந்தநாள் நிறைவு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Amit Shah, Assam, History, Home Minister Amit shah