ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்? அமித் ஷா

பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்? அமித் ஷா

வரலாற்றை உண்மையோடு மாற்ற வேண்டும்

வரலாற்றை உண்மையோடு மாற்ற வேண்டும்

History to be rewritten: வரலாற்றை அரசாங்கங்களால் உருவாக்க முடியாது, அது உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று நாம் உண்மை என்று நம்பும் வரலாற்றுக்கு பின்னால் பல உண்மை வரலாறுகள்  மறைந்திருக்கும். அதை வரலாற்றாசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும் என அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாமிய அரசர்கள் குறித்து மட்டுமே அதிகம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அமித் ஷா, பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் போன்ற  பேரசர்கள் குறித்து பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்,

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற, எழுத்தாளர் ஓமேந்திர ரத்னுவின் ‘மஹாராணா: சஹஸ்த்ர வர்ஷா கா தர்ம யுத்தம் [மஹாராணாக்கள்: தர்மத்திற்கான ஆயிரம் வருடப் போர்] புத்தக வெளியீட்டு விழாவில்  அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.  .புத்தகத்தை வெளியிட்டு பேசிய அமித் ஷா, ​​“வரலாற்றை அரசாங்கங்களால் உருவாக்க முடியாது, அது உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று நாம் உண்மை என்று நம்பும் வரலாற்றுக்கு பின்னால் பல உண்மை வரலாறுகள்  மறைந்திருக்கும். அதை வரலாற்றாசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும் ” என்றார்.

இன்று நாம் படிக்கும் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள் முகலாய ஆட்சியை பற்றி மட்டுமே விவாதித்துள்ளனர். அவர்களைத் தாண்டி பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அஸ்ஸாமை ஆண்டது. அஹோம்கள்  பக்தியார் கல்ஜி, ஔரங்கசீப்பை தோற்கடித்து அசாம் இறையாண்மையை தக்க வைத்துள்ளனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மௌரியர்கள் முழு நாட்டையும் - ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை - 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சத்வாகனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் (குப்த பேரரசர்) சமுத்திரகுப்தர் முதல் முறையாக ஒரு ஐக்கிய இந்தியாவைக் கற்பனை செய்தார். ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புப் புத்தகம் இல்லை,'' என்றார்.

 வரலாறுகள் எல்லாம் வெற்றி தோல்வியை வைத்து நிர்ணயிக்கப்படுவது இல்லை. அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது. இன்று நாம் உண்மை என்று நம்பும் பலவும் உண்மையான சம்பவங்கள், வரலாறுகள் வெளிவரும்போது மறைந்துவிடும் என்றார்.

மேலும் நாம் வாழ்வது சுதந்திர நாடு. உண்மையை எழுத யாருக்கும் தடை இல்லை. யாரும் நம்மை தடுக்க மாட்டார்கள். அதனால் வரலாற்றாசிரியர்கள் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க...காற்று மாசால் ஜனவரி முதல் தலைநகரில் நிலக்கரிக்குத் தடை!

"ஹல்திகாட்டி போரைப் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கிறார்கள், ஆனால் பலருக்கு டெவைர் போரைப் பற்றி தெரியவில்லை. ஏன் அப்படி ?" என்று ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு போரில் வெற்றியோ தோல்வியோ வரலாற்றின் அடிப்படை அல்ல, ஆனால் அத்தகைய சம்பவத்தின் விளைவுதான் அந்த வரலாற்றை உருவாக்கியது என ஷா கூறினார். உதாரணமாக, ராணி பத்மினியை அவர் மேற்கோள் காட்டினார். ராணி பத்மினியின்  செயல் பலரை அவர்களின் கண்ணியத்திற்காக நிற்க, தொடர்ந்து தூண்டுகிறது. 1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான கிளர்ச்சியில் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர், ஆனால் அது முழு நாட்டையும் உலுக்கியது.

அதனால் தோல்வி  பாராமல் வீரத்தை பதிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில்,  அமித் ஷாவின் கருத்து  முஸ்லிம்கள் எதிர்ப்பையும், வரலாற்றை  காவியாக்கும் எண்ணமோ  என ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், பா.ஜ.க ஆளும்  குஜராத் அரசு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதையை உருவாக்க முடிவு செய்தது.

மார்ச் 2021 இல், பல்கலைக்கழக மானியக் குழுவானது இளங்கலைப் பட்டதாரிகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இந்து சமய புராணங்களையும் மத நூல்களையும் சேர்த்து உருவாக்கியுள்ளது. கர்நாடக பாடத்திட்டத்தில் இருந்து பகத் சிங், திப்பு சுல்தான் பற்றிய கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் அவர்கள் எடுத்துக்காட்டாக கூறுகின்றனர். 

Published by:Ilakkiya GP
First published:

Tags: Amit Shah, Education, History