ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவை இணைக்கும் முயற்சியில் எங்களை யாரும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு

இந்தியாவை இணைக்கும் முயற்சியில் எங்களை யாரும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தில், வரும் 6ம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  இந்தியாவை இணைக்கும் முயற்சியில், தங்களை யாரும் தடுக்க முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற யாத்திரைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  இந்த நிலையில் மைசூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் ராகுல்காந்தி உரையாற்றினார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தியாவை இணைக்கும் முயற்சியில் தங்களை எதுவும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ராகுல்காந்தியின் பேச்சை ஜெய்ராம் ரமேஷும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தில், வரும் 6ம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

  Also Read: காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை தொடக்கம்.. பீகார் அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்!

  கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, வரும் 8ம் தேதியன்று பிரியங்கா காந்தியும் நடைபயணத்தில் இணைவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Congress, RahulGandhi, Tamil News