Home /News /national /

காற்று மாசுபாட்டில் இருந்து எவரும் தப்ப முடியாது

காற்று மாசுபாட்டில் இருந்து எவரும் தப்ப முடியாது

காற்று மாசு

காற்று மாசு

பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், மாசுபாட்டில் இருந்து தப்பித்து விடலாம் என நினைக்கின்றனர். ஏனெனில் அவர்கள் அலுவலகத்துக்கு குளிரூட்டப்பட்ட காரில் சென்று வருகிறார்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் வேலை பார்க்கிறார்கள் மற்றும் காற்று மாசு இல்லாத இடங்களில் வாழ்வது போன்றவற்றால் தங்களுக்கு எவ்விதமான உடல்நல பாதிப்பும் ஏற்படாது என்பது எண்ணுகின்றனர். அது தவறு.

மேலும் படிக்கவும் ...
பெருநிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்தான் காற்று மாசுவால் ஏற்படும் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பெரு நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கார்களில் செல்லும்போது அதிகமாக ஏ.சி. பயன்படுத்துகின்றனர்.

அப்போது, காரின் ஏ.சி. இயந்திரம், வெளியில் இருக்கும் மாசுக்களை காருக்குள்ளே உறிஞ்சிக்கொள்கின்றன. ஏ.சி. பயன்பாட்டில் இருப்பதால் அந்த துகள் காருக்குள்ளேயே சுற்றி வருகின்றன. இதனால் காருக்குள் பயணிக்கும் நபர்களுக்கு காற்று மாசுவில் உள்ள நச்சு பொருட்கள் மூலம் உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது என கலிஃபோர்னியாவில் இயங்கி வரும் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் இருக்கும் காற்று மாசுவை காட்டிலும் ஏ.சி காரினுள் உள்ள மாசு அளவு பத்து மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிகிறது. குறிப்பாக கேசோலின்,  டீசல் மூலம் வெளியேறும் நச்சுக்காற்று, கார்பன் மோனாக்சைடு, பென்சீன், டொல்யுயீன், ஃபஹார்மல்டிஹைட், நைட்ரஜின் ஆக்சைடு மற்றும் காற்று மாசுவில் கலந்துள்ள கண்ணுக்கு தெரியாத துகள் போன்றவை ஏ.சி வாகனங்களில் பயணிப்போருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெளிவாக தெரிவிக்கின்றன.

இந்திய அறிவியல் கழக, சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் பேராசிரியர் டாக்டர்.ராமச்சந்திரா “எப்போதும் முழுவதும் மூடப்பட்ட அறை அல்லது ஏ.சி கார் அகியவற்றில் தான் காற்று மாசு அதிகமாக இருக்கும் இதை அங்குள்ள மக்கள் அப்படியே சுவாசிக்கின்றனர். அறையில் உள்ள ஏ.சி சரியாக பராமரிக்காதபோது அந்த அறையில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அதிகரிக்கும். அதுவும் நமக்கு சுவாச பாதையில் பிரச்சனைகளை உருவாக்கும்” என அவர் தெரிவித்தார்.

கோப்புப் படம்


உயிரி தொழில்நுட்பவியலுக்கான தேசிய மையத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது அதில் “ அடைக்கப்பட்ட காரினுள் அதிக மாசு இருப்பதாகவும் இதனால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இதய நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா,நிமோனியா, சுவாச பாதையில் நோய்தொற்று உள்ளிட்ட நோய்கள் வர அதிக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது”.

காரினுள் உள்ள காற்றின் தரம் – (indoor car air quality)

அதிக மூலக்கூறு எடையுடைய பிளாஸ்டிசைசர் – (high molecular weight platiciser)

கார்பன் ஆக்சைடு - (carbon oxides)

கண்ணுக்குத்தெரியாத துகள் – (particulate matterparticulate matter)

காற்றில் பரவும் நுண்ணுயிரிகள் - (airbone bacteria)

பூஞ்சான் – (Fungi)

எரிபொருள் மூலம் வெறியேறும் நச்சுக்காற்று(Noval brominated flame retardants)

ஆர்கேனோ பாஸ்பேட் மூலம் வெளியேறும் நச்சுக்காற்று(organo phosphate flame retardants)

கனிம சேர்மங்கள் மூலம் வெளியேறும் நச்சுக்காற்று(volatile organic compounds)

தேசிய உயிரி தொழில்நுட்பவியலின் தரவுகளை அடிப்படியில் தயாரிக்கப்பட்டது.

 

ஏ.சி காரின் உள்ளே உள்ள மாசு :தேசிய உயிரி தொழில்நுட்பவியலின் தரவுகளை அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. (Indoor Car Air Pollutants (Source- NCBI Study))


உண்மையில் சுத்தமானதா ஏ.சி.அறைகள்?

முழுவதும் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களும் காற்று மாசுவினால் பாதிக்கப்படும். குளிரூட்டப்பட்ட அலுவலகங்களின் காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் சுமார் எட்டு லட்சம் பேர் மரணித்துள்ளனர் என்று டான்செட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

“நல்ல காற்றோட்டமான வீடு அமைந்துள்ளதை உறுதி செய்வது , காரின் உட்புறத்தில் உள்ள காற்றின் தரம் சுவாசிக்க தகுந்ததாக மாற்றுவது, குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் காற்றில் உள்ள மாசு மற்றும் துகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல். தரைவிரிப்பான் மற்றும் மர அலமாரிகளின் தூய்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை செய்வதன் மூலம் காற்று மாசு மற்றும் அது தொடர்பான நோய்களில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்.

அதேபோல் மேலே உள்ளவற்றை சரியாக பராமரிப்பு செய்யாவிட்டால் நம் நுரையீரலுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும். ”என நுரையீரல் நிபுணர் டாக்டர் சசிதர கங்கையா தெரித்தார்.

புதிய அல்லது புதுப்பிக்கப்படும் கட்டிடங்கள் தான் வீட்டின் உட்புறத்தில் காற்று மாசு ஏற்பட 30 % காரணமாக இருக்கின்றன என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படும் போது  காற்றோட்டமாக இருந்த வீடு பழைய தன்மையை இழக்கிறது. புதிய கட்டிடத்தால் காற்றோட்டம் சரியாக கிடைக்காமல் போகிறது. அப்போது வீட்டின் உட்புறத்தில் காற்று மாசு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் புனரமைக்கும் போது பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் கலந்த பசைகள், மரச்சாமன்கள் செய்யும் போது வெளிவரும் துகள், பூச்சிக்கொள்ளிகள், தூய்மைப்படுத்த பயன்படும் அமிலங்கள் கலந்த திரவங்கள் ஆகியவற்றால் வீட்டின் உட்புறத்தில் உள்ள காற்று மாசடைகிறது.

அதேபோல் மோட்டார் வாகங்களில் இருந்து வெளிவரும் புகை, வீட்டின் உள்ளே வரக்கூடிய காற்றை மாசுப்படுத்தி நச்சு புகையாக மாற்றும். அதேபோல  நுண்ணுரிகளால் ஏற்படும் காற்று மாசுவையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாதிரி படம்


“முழுவதும் குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள், ஏ.சி.கார் மற்றும் குளிரூட்டப்பட்ட வீடு ஆகிய இடங்களில் 90 சதவிகிதம் தன் நேரத்தை செலவிடுபவருக்கு நிச்சயம்  காற்று மாசு தொடர்பான நோய்கள் வரும். பெங்களூருவில் உள்ள மக்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டபோது அதிகமாக வெளி இடங்களை பயன்படுத்தாத மக்களும் காற்று மாசு தொடர்பான நோய்களினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு யாரும் விதிவிலக்கு இல்லை. குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள், கார்கள் மற்றும் வீடு உள்ளோருக்கு காற்று மாசு ஏற்படாது என்பது தவறான வாதம்” என்று குழந்தைகளுக்கான நுரையீரல் நிபுணர் மற்றும் தெய்வெசா வானிலை மாற்றம்  மையத்தின்  பேராசிரியர், டாக்டர். ஹெச். பரமேஷ் தெரிவித்தார்.“குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் மற்றும் கார்களில் உள்ள காற்றில் கலந்துள்ள மாசு வெளியிடங்களில் உள்ள காற்று மாசை போன்றதே ஆகும். அதிக எண்ணிக்கையில் மரங்கள் மற்றும் செடிகளை வளர்ப்பது மற்றும் தனியார் வாகனங்களை விடுத்து பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவது  இதை செய்தால் மட்டுமே காற்று மாசுவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் ”என இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினர் திரு யெல்லப்ப ரெட்டி தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: AC, Air pollution

அடுத்த செய்தி