ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேற்கத்திய நாடுகளின் அறிவியல் தேவையில்லை! - நியூஸ்18 மாநாட்டில் பாபா ராம்தேவ்

மேற்கத்திய நாடுகளின் அறிவியல் தேவையில்லை! - நியூஸ்18 மாநாட்டில் பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

இங்கு யாராலும் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால், இந்தியாவில் இந்து மதத்தையும் வேதங்களையும் பலர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் தேவையில்லை. நம்மிடம் நமக்கு சொந்தமான அறிவியலே உள்ளது என்று நியூஸ் 18 உச்சி மாநாட்டில் யோகா குரு பாபா ராமதேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் மீடியா நெட்வொர்க்கான நியூஸ் 18 , இரண்டாம் ஆண்டாக ரைசிங் இந்தியா மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

முன்னதாக, யோகா குரு பாபாராம்தேவ், சத்குரு ஆகிய இருவரும் முதல் அமர்வில் பங்கேற்றனர். அப்போது பேசிய பாபா ராம்தேவ், ‘பைபிள் மற்றும் குரானை இங்கு யாராலும் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால், இந்தியாவில் இந்து மதத்தையும் வேதங்களையும் பலர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். விரைவில் இந்திய கல்வி வாரியம் அமைக்கப்படும்.

அது, இந்தியர்கள் எப்படி சிந்திக்கவேண்டும் என்பதை அது மாற்றும். வெளிநாட்டு மொழிகளில் மதமும் ஆன்மீகமும் வேறுவேறானது. ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அறிவியல் நமக்குத் தேவையில்லை. நம்முடைய அறிவியல் இங்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: Baba Ramdev, News 18 conference, NEWS18 RISING INDIA