கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற உத்தரவை மாநில அரசாங்கங்கள் திரும்ப பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த போது கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி அளித்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினர். இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல சில மாநில அரசுகள் தடை விதித்தன.
இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல சில மாநில அரசுகள் தடை விதித்தன.இந்நிலையில், கட்டாய தடுப்பூசி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் எல்என் ராவ் மற்றும் பிஆர் காவி ஆகியோர் அமர்வு, எந்தவொரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பாதிப்பு எண்ணிக்கு குறைவாக உள்ள சூழலில் தனிநபர்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது என மத்திய மாநில அரசாங்கங்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது. அதை தளர்த்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எதிர்கொண்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடுமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், சிறார்களின் தடுப்பூசிகளை பொறுத்தவரை நிபுணர்களின் அறிவுரையின்படி, சர்வதேச அளவில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பொதுவெளிகளில் வரும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தன. அனைத்து நபர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்தாக இம்மாநிலங்கள் நீதிமன்ற வாதத்தில் தெரிவித்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19 vaccine, Supreme court