மம்தாவை யாரும் தாக்கவில்லை, போலீசார் இருந்தனர்- நேரில் பார்த்த சாட்சிகள், பாஜக திட்டவட்டம்

மமதா பானர்ஜி

அவரது காரைத் தாக்கியது யார் தலிபான்களா? பெரிய போலீஸ் படையே அவர் பின்னால் இருக்கிறது, யார் அவரை நெருங்க முடியும்? அவரது பாதுகாப்புப் பணியில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கின்றனர்.

 • Share this:
  மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை யாரும் தாக்கவில்லை என்று உள்ளூரைச் சேர்ந்த சிலர் தாங்கள் நேரில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

  தற்போது மம்தா பானர்ஜி மருத்துவமனையில் ‘பல காயங்களுக்கு’ சிகிச்சை பெற்று வருவதாக அந்தக் கட்சியின் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் அவர் தாக்கப்படவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு கோவிலாக அவர் சுவாமி தரிசனம் செய்தார். புர்பா மெதினிபூர் எனும் பகுதியில் இன்று மாலை கோவில் ஒன்றில் தரிசனம் முடித்து திரும்பும் போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் அதன் காரணமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தோய்ந்த முகத்துடன் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடையே தெரிவித்தார். தாக்குதல் நடந்த சமயத்தில் தன்னருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதித் செயல் எனவும் காரில் இருந்தவாரே அவர் தெரிவித்தார்.

  இந்நிலையில் நேரில் பார்த்தவர்கள் சிலர் அவர் தாக்கப்படவில்லை, அது ஒரு அசம்பாவிதம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

  அது ஒரு அசம்பாவிதம், மம்தாவின் கார் கதவு தூண் ஒன்றில் மேல் மோதியது யாரும் அவரைத் தாக்கவில்லை. என்று ஒருவர் அந்தத் தனியார் தொலைக்காட்சிக்குக் கூறும்போது தான் சம்பவ இடத்தில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

  ஏ.என்.ஐ. செய்தி ஊடகத்துக்கு மாணவர் ஒருவர் கூறும்போது, “முதல்வர் மம்தா வரும்போது அவர் காரை நோக்கி மக்கள் குவிந்தனர், அப்போது அவர் கழுத்தில், காலில் அடிபட்டது. அவரை யாரும் தள்ளவில்லை. கார் மிக மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

  மம்தா அனுதாபம் தேடுகிறார்: பாஜக தாக்கு

  தன்னை 4-5 பேர் தாக்கியதாகவும் காவலர்கள் இல்லை என்றும் கூறுகிறார் மம்தா, அவர்தான் முதல்வர் இப்படியிருக்கையில் தான் தாக்கப்பட்டதாக நாடகம் ஆடுகிறார், அனுதாப அலையை உருவாக்கப்பார்க்கிறார், அப்படியிருந்தாலுமே முதல்வரே தாக்கப்படும் அளவுக்கு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு இருப்பதாகத்தானே அர்த்தம்.

  அவரது காரைத் தாக்கியது யார் தலிபான்களா? பெரிய போலீஸ் படையே அவர் பின்னால் இருக்கிறது, யார் அவரை நெருங்க முடியும்? அவரது பாதுகாப்புப் பணியில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர் அனுதாபத்துக்காக நாடகம் ஆடுகிறார், என்று பாஜக மாநில துணைத்தலைவர் அர்ஜுன் சிங் சாடினார்.
  Published by:Muthukumar
  First published: