முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? ஜே.பி.நட்டாவை சந்தித்த எடியூரப்பா விளக்கம்..

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? ஜே.பி.நட்டாவை சந்தித்த எடியூரப்பா விளக்கம்

எடியூரப்பா கர்நாடகா திரும்புவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரையும் சந்திக்க இருக்கிறார்.

  • Share this:
    முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி யாரும் என்னிடம் கேட்கவில்லை என்றும் மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என எடியூரப்பா கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாஜகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மாநில பாஜக தலைவர்கள் மத்தியில் முதல்வர் எடியூரப்பா மீது அதிருப்தி எழுந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், நேற்று முதல்வர் எடியூரப்பா டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார். இந்ந சந்திப்பின்போது, உடல்நலக்குறைவு காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

    மேலும், எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு மாநில கட்சி பிரிவில் உயர் பதவி கிடைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

    Also read: ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு: 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவதாக எடியூரப்பா வாக்குறுதி

    இதைத்தொடர்ந்து, இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும்போது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி யாரும் என்னிடம் கேட்கவில்லை. அத்தகைய நிலைமையும் எழவில்லை. மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை.

    கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தேன். அவர் எனக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவருக்கு என் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது. நான் தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றுவேன், கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு கடுமையாக உழைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, எடியூரப்பா கர்நாடகா திரும்புவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரையும் சந்திக்க இருக்கிறார்.
    Published by:Esakki Raja
    First published: