Home /News /national /

புதிய கார் வாங்கக் கூடாது, தொண்டர்கள் காலில் விழ அனுமதிக்கக் கூடாது.. அமைச்சர்களுக்கு காறர் உத்தரவுகளை பிறப்பித்த தேஜஸ்வி!

புதிய கார் வாங்கக் கூடாது, தொண்டர்கள் காலில் விழ அனுமதிக்கக் கூடாது.. அமைச்சர்களுக்கு காறர் உத்தரவுகளை பிறப்பித்த தேஜஸ்வி!

அமைச்சர்களுக்கு தேஜஸ்வி யாதவ் உத்தரவு

அமைச்சர்களுக்கு தேஜஸ்வி யாதவ் உத்தரவு

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தனது கட்சி அமைச்சர்களுக்கு அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகாரில் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசை அமைத்துள்ளார். கூட்டணியில் தேஜ்ஸவி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்களும் உள்ளனர். முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டணியின் புதிய அமைச்சரவை அன்மையில் பொறுப்பேற்றுக் கொண்டது.

    முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான இந்த கூட்டணி அமைச்சரவையில், அதிக எம்எல்ஏக்களை கொண்ட கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி மீது 'ஜங்கல் ராஜ்', அதாவது காட்டு ஆட்சி நடத்தும் விதமாக மோசமாக செயல்படும் என விமர்சனம் நீண்ட கலமாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது கட்சியின் பிரதான முகமாக இருக்கும் லாலு யாதவின் மகனும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தனது அமைச்சர்களுக்கு பல்வேறு வழிகாட்டு விதிகளை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, "புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் யாரும், தங்கள் துறைக்கெனக் கூறி புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது.பிறரை பார்த்தால் மரியாதையுடன் வணக்கம் செலுத்த வேண்டும். அதேபோல், தங்கள் தொண்டர்கள் யாரும் காலில் விழுவதை அமைச்சர்கள் அனுமதிக்கக் கூடாது.  புத்தகம், பேனா போன்றவற்றை அமைச்சர்கள் பரிசளிக்க வேண்டும்.ஏழை எளியோர் தேவை என்று தேடி வரும் போது, அவர்களின் சாதி மதம் போன்ற பின்னணியை பார்க்காமல் பாரபட்சமின்றி தேவையான உதவியை செய்து தர வேண்டும்.

    இதையும் படிங்க: வீட்டின் உரிமையாளரை கொலை செய்து செல்ஃபி - பீகார் இளைஞர் டெல்லியில் கைது

    தங்களின் நேர்மையான செயல்பாடுகள், திட்டங்களை அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்." இவ்வாறு பல்வேறு வழிகாட்டு உத்தரவுகளை துணை முதலமைச்சர் தேஜஸ்வி தனது கட்சி அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Minister, RJD

    அடுத்த செய்தி