இந்தியாவில் H3N2 வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு ஆலோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகின்றன.
இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் இணை நோய்களைக் கொண்ட குழந்தைகள் மற்றும் முதியோர்தான் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர். இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம். பாதிப்புக்கு ஆளாகும் நபர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், சுவாச பிரச்னைகள் போன்றவை ஏற்படுகின்றன.
இதையும் படிங்க; "அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்"... ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு..!
இந்நிலையில், தொற்று குறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் முக்கிய ஆலோசனைகளை தந்து வருகின்றனர். இந்த தொற்று பரவல் குறித்து அப்பல்லோ மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகரான தருண் சாஹனி கூறுகையில், "பாதிப்பு ஏற்பட்டவர்களில் 5 சதவீதம் பேருக்கு தான் மருத்துமனையில் சிகிச்சை எடுக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, மக்கள் பதற்றம் அடையாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலே போதும். கொரோனா காலத்தில் கடைபிடித்த சுகாதார முன்னெச்சரிக்கை செயல்களை பின்பற்றினாலே போதும்" என்று கூறியுள்ளார்.
மூத்த தொற்று நிபுணரான உபாசனா ரே கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் பலர் தொற்றில் இருந்து மீண்டு வரும் காலம் அதிகம் பிடிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் தீவிரமாக முகக்கவசம் அணியும் வழக்கத்தை கடைபிடித்துள்ளனர். இதனால் கூட மற்ற வைரஸ்களுக்கு எதிரான நமது நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்க வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
இந்நிலையில் மற்றொரு நிபுணரான மருத்துவர் அகர்வால் கூறுகையில், இந்த வைரஸ் பரவல் காரணமாக புதிய நோய் பாதிப்பு அலை ஏற்பட வாய்ப்பு இல்லை. இயல்பாகவே நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசிகள் நம்மை பாதுகாக்கும். அதேவேளை, ஒரு சில இறப்புகள் என்றால் கூட அவை கவலைக்குரியவை தான்" என்றார். எனவே, மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை மாறாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.