கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,'கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.
3 வது அலையை கடக்க இந்த '3 C'-யை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று, (close contact) நெருங்கிய தொடர்பு, (close space) (காற்றோட்டம் இல்லாத இடம்), (Crowd) கூட்டம் கூடுவது.. இந்த மூன்றையும் நினைவில் கொண்டு நாம் செயல்பட்டால், நிச்சயம் 3வது அலையை நாம் கடந்து விடலாம்.
மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலில் வைரஸை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அவற்றை தடுப்பதாக நினைத்து பல நாடுகள் லாக்டவுன் அறிவித்தன. தற்போது நமக்கு அவற்றை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், நாம் லாக்டவுன் போட வேண்டிய அவசியமில்லை.
ஒமைக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது. ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக தெரிந்தாலும், தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதையும் கடந்துவிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also read... 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.