• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • “எந்த நூலுக்கும் தேசிய நூல் அந்தஸ்து கொடுக்கும் திட்டம் இல்லை” - மத்திய அமைச்சர்

“எந்த நூலுக்கும் தேசிய நூல் அந்தஸ்து கொடுக்கும் திட்டம் இல்லை” - மத்திய அமைச்சர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஏதாவது கோரிக்கைகள்வந்துள்ளதா..? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் “எந்த நூலுக்கும் தேசிய நூல் அந்தஸ்து கொடுக்கும் திட்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற மக்களவையில் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், “திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தமிழக அரசு அல்லது ஏதாவது என்.ஜி.ஓ, அமைப்புகளிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் அதன் விபரங்கள் என்ன?

    பரிந்துரையின் பெயரில் மத்திய அரசு எப்போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும்?” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போஹ்ரியால், “ திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீகுமாரிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது. ஆனால், தற்போது, எந்த நூலுக்கும் தேசிய நூல் அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: