ஹோம் /நியூஸ் /இந்தியா /

Exclusive: இனி கொரோனாவால் ஆபத்து இல்லை... ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

Exclusive: இனி கொரோனாவால் ஆபத்து இல்லை... ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடந்த ஓராண்டில் கவலையளிக்க கூடியது என்று வகைப்படுத்தும் அளவில் எந்தவித ஒமிக்ரான் திரிபும் உண்டாகவில்லை என்று ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி ராமன் கங்காதர் கூறுகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  கோவிட்-19 மூலம் இனி ஆபத்து இல்லை என்றும் கவலையளிக்கக் கூடிய வகையில் எந்த திரிபும் உருவாகவில்லை என்றும் ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி ராமன் கங்காதர் நியூஸ்18.காம்-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  கொரோனா தொற்று பரவத் தொடங்கி கிட்டத் தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அத்தொற்றினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், கொரோனா ஏற்படுத்திய வடு என்பதை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

  ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, உலக சுகாதார அமைப்பு Omicron ஐ கவலை அளிக்கக் கூடிய திரிபாக  தெரிவித்தது.  அதன் பின்னர், இதுவரை எந்த புதிய திரிபு கண்டறியப்படாமல் உலகம் முழுவதும் ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்துகிறது. இது தொடர்பாக ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானியான ராமன் கங்காதர் கூறுகையில்,  இதற்கு முன்பு, 6 மாதங்களுக்கு ஒருமுறை நாம் புதிய கோவிட் அலைகளை எதிர்கொண்டோம். ஆனால், கடந்த ஆண்டில் இருந்து ஒரே ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்துகிறது’ என்றார்.

  கங்காகேத்கரின் கூற்றுப்படி, உலகம் "ஒன்றிணைந்த பரிணாமத்தை" காண்கிறது. மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் மற்றும் கடந்தகால நோய்த்தொற்றுகளை உள்ளடக்கிய உடலின் நோயெதிர்ப்பு அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக வெவ்வேறு மாறுபாடுகளை உயிரினங்கள் உருவாக்குகின்றன.

  மேலும் படிக்க: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்- எஸ் விண்ணில் செலுத்தப்பட்டது

  கொரோனா வைரஸ் காலப்போக்கில் உருவாகி தன்னை மாற்றிக் கொள்கிறது. இதனால்,  தொற்றும் தன்மை அதிகரித்தாலும் வீரியம் குறைவாகவே உள்ளது.  ஆரம்பத்தில் ஒமிக்ரான் 37 திரிபுகள் கண்டறியப்பட்டன. தற்போது  உலகம் முழுவதும் ஒரேவொரு  வகையான ஒமிக்ரான் தான் உள்ளது

  ஓமிக்ரான் முதன்முதலில் காணப்பட்ட கடந்த நவம்பரில் இருந்து இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த நவம்பர் வரை, ஓமிக்ரானின் வெவ்வேறு வம்சாவளியினர் தலைப்புச் செய்திகளைக் கைப்பற்றுவதைத் தவிர கவலையளிக்கக் கூடிய வகையிலான திரிபுகள் எதுவும் இல்லை. ஒமிக்ரானை பொறுத்தவரை ஒரே குடும்பத்தில் பல்வேறு பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்துள்ளது. ஆனால், அவை எதுவும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கு இட்டு செல்லாதவையே என்றும் அவர் கூறுகிறார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona, Covid-19