ஹோம் /நியூஸ் /இந்தியா /

உணவுக்கே பணமில்லை.. குழந்தை கொலை.. பிட்காயினால் பணமிழந்த ஐடி ஊழியரின் விபரீத முடிவு!

உணவுக்கே பணமில்லை.. குழந்தை கொலை.. பிட்காயினால் பணமிழந்த ஐடி ஊழியரின் விபரீத முடிவு!

கைது செய்யப்பட்ட ராகுல் பார்மர்

கைது செய்யப்பட்ட ராகுல் பார்மர்

கடுமையான பணம் நெருக்கடி காரணமாக தனது 2 வயது கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட ஐடி ஊழியரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karnataka, India

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் பார்மர் என்ற 45 வயது நபர் வேலை நிமித்தமாக கர்நாடகாவில் குடிபெயர்ந்தவராவார். அங்குள்ள பெங்களூரு நகரில் மனைவியுடன் வசித்து வரும் இவர் ஐடி துறையை பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கும் இவரது மனைவிக்கும் 2 வயதில் ஜியா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில்,குறைந்த காலத்தில் அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை காரணமாக ராகுல் பிட்காயின் பிஸ்னஸ் செய்து வந்துள்ளார்.ஆனால், பிட்காயின் வர்த்தகம் மோசடியாக மாறவே இதில் தனது முதலீட்டு பணத்தை எல்லாம் இழந்துள்ளார் ராகுல். அத்துடன் நிதி நெருக்கடி காரணமாக பல பேரிடம் கடன் வாங்கி அந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார் ராகுல். ஒரு கட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் அவரது நகைகளை அடகு வைத்து அதன் மூலமாக பண நெருக்கடியை சமாளிக்க பார்த்துள்ளார் ராகுல். அந்த நகைகளை திருடர்கள் திருடிவிட்டதாக மனைவியிடம் பொய் கூறியுள்ளார்.

இந்த சூழலில் தனது பண நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார் ராகுல். கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று தனது மகளை வெளியே அழைத்து சென்றுள்ளார் ராகுல். பெங்களூரு - கோலார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு மகளை கொண்டு சென்று நீரில் இறங்கிய ராகுல், தனது மகளை நெஞ்சோடு அனைத்து வைத்து நீரில் மூழ்க வைத்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த இறந்த மகளின் உடலை நீரில் வீசி, தானும் நீரில் குதித்துள்ளார்.

இதையும் படிங்க: வாய்ப்பாடு ஒப்பிக்காத மாணவனின் கையில் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டை : ஆசிரியர் செய்த கொடூர செயல்!

ஆனால், நீரின் ஆழம் மிக குறைவாக இருந்ததால் ராகுலால் தற்கொலை செய்ய முடிவில்லை. இந்த சூழலில் தனது கணவரையும் மகளையும் காணவில்லை என்று ராகுலின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், பெங்களூரு போலீசார் ராகுலை கைது செய்தனர். தனது மகளுக்கு உணவு வாங்கித் தரக் கூட பணம் இல்லாத மோசமான சூழலில் இருக்கிறேன். இதனால் தான் மகளை கொன்று தற்கொலைக்கு முயன்றேன் என ராகுல் காவல்துறையிடம் வாக்குமூலம் தந்துள்ளார். இதையடுத்து ராகுல் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

First published:

Tags: Bitcoin, Child murdered, Father, Karnataka