முகப்பு /செய்தி /இந்தியா / தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை... பீகார் குழு அளித்த அறிக்கை..!

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை... பீகார் குழு அளித்த அறிக்கை..!

பிகார் குழுவுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித்

பிகார் குழுவுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித்

தமிழ்நாட்டிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்த பீகார் குழு, அதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் பகிரப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை செயலர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருப்பூர், கோவை மற்றும் சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தது. தமிழ்நாட்டில் ஆய்வை முடித்துக்கொண்டு பிகார் திரும்பியது. அதிகாரிகள் குழு நேற்று முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வீடியோக்கள் போலியானது என்று  குறிப்பிட்டுள்ளது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலமுருகன், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள், பிகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவை போலியானவை என்றார். இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்றும் கூறினார். போலி வீடியோக்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் உருவாக்கிய பீதி தற்போது குறைந்துள்ளதாகவும் பாலமுருகன் தெரிவித்தார்.

First published:

Tags: Attacked, Bihar, Migrant Workers, Migrants