மே 17-க்குப் பிறகு தொடங்கும் விமானப் போக்குவரத்து: ஆரோக்ய சேது ஆப் கட்டாயம்

மாதிரிப் படம்

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்களில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 • Share this:
  இந்தியாவில் விமானப் போக்குவரத்தை மே 17-ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக தொடங்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

  கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 50 நாள்களுக்கும் மேலாக விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்களில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மே 17-ம் தேதித்துக்கு பிறகு உரிய கட்டுப்பாடுகளுடன் 25% விமானங்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விமானத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் அவர்களது மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப்பை வைத்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களில் உணவுப் பொருள்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான சேவையைத் தொடங்க பணிகள் தயார் நிலையில் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   

  Also see:
  Published by:Karthick S
  First published: