ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேர்தலில் எந்த முறைகேடும் இல்லை, ஊடகங்கள் முன் வேறு முகம் காட்டும் சசி தரூர்.. மதுசூதன் மிஸ்ரி காட்டம்!

தேர்தலில் எந்த முறைகேடும் இல்லை, ஊடகங்கள் முன் வேறு முகம் காட்டும் சசி தரூர்.. மதுசூதன் மிஸ்ரி காட்டம்!

சசி தரூருக்கு மதுசூதன் மிஸ்த்ரி விளக்கம்

சசி தரூருக்கு மதுசூதன் மிஸ்த்ரி விளக்கம்

கட்சியினர் முன்பு ஒரு முகத்தையும் ஊடகத்தின் முன் வேறு முகத்தையும் சசி தரூர் காட்டுவதாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக சசி தரூர் தரப்பு கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என காங்கிரஸ் தேர்தல் அமைப்பு தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி விளக்கமளித்துள்ளார்.

  அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிட்டனர். இதில் அகில இந்திய அளவில் 9,915 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 695 வாக்குகள் பதிவாகின.

  தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே 7897 வாக்குகளும், எதிர்வேட்பாளர் சசி தரூர் 1072 வாக்குகளும் பெற்றுள்ளனர். 416 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே,தேர்தலில் சசிதரூரை வென்ற மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸின் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.

  இதையும் படிங்க: எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை உயர்த்தி கர்நாடகா அரசு அவசர சட்டம் - அமைச்சரவை ஒப்புதல்!

  இந்நிலையில், தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், உத்தர பிரதேசத்தில் வாக்குப் பதிவுக்குப் பின்னர் முறைப்படி சீல் வைக்கப்படவில்லை எனவும் சசி தரூர் தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். உத்தர பிரதேச வாக்குப்பதிவில் நம்பகத் தன்மை இல்லாததால் அம்மாநில வாக்குகள் செல்லாதது என அறிவிக்கவும் சசி தரூர் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

  இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மதுசூதன் மிஸ்த்ரி, " சசி தரூர் தரப்பு கோரிக்கையை ஏற்று தேர்தல் நடைமுறை குறித்து நேரடியாகவே விளக்கம் அளித்தேன். தேர்தல் விவகாரத்தில் நான் அளித்த உரிய விளக்கங்களை சசி தரூர் தரப்பினர் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஊடகங்கள் முன்பாக வேறு வேறு மாதிரியாகத் திரித்துப் பேசி வருகிறீர்கள்" என கூறியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Congress, Shashi tharoor