8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா? மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

பிரகாஷ் ஜவடேகர்

அந்கல்வியியலாளர் வசுதா காமத், மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ், பல்கலைக்கழக பேராசிரியர் மஞ்சுள் பார்கவா உள்ளிட்ட 8 பேர் இடம் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் எந்த மொழியையும் கட்டாயம் பயில வேண்டும் என்று பரிந்துரை செய்யவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

  இந்தியக் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில், கல்வியியலாளர் வசுதா காமத், மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ், பல்கலைக்கழக பேராசிரியர் மஞ்சுள் பார்கவா உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.

  அந்தக் குழவின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து, டிசம்பர் 31-ம் தேதி, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

  1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவடேகர், ‘புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கையில், எந்த மொழியையும் கட்டாயப்படுத்தவேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.  இந்த அறிக்கை குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால், இதுகுறித்து விளக்கமளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: