அப்பளம் விரும்பிகளுக்கு ருசிகர செய்தி சொன்ன மத்திய அரசு

அப்பளம்

அப்பளத்தை விரும்பி சாப்பிடுவோர்களுக்கு ருசிக்கும் வகையிலான விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 • Share this:
  இந்தியர்களிடையே அப்பளத்துக்கு என்றுமே தனி மவுசு உண்டு. தென்னிந்தியர்கள் அப்பளம் என்பார்கள்...வடஇந்தியர்கள் பப்படம் என்பார்கள். அப்பளப் பிரியர்கள், வறுத்தோ, சுட்டோ எப்படி இருந்தாலும் ஒகே அப்பளத்தை அப்படியே சாப்பிடுவோம் என்பார்கள். உண்ணாமல் அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட ரெண்டு அப்பளத்தை கண்ணில் காட்டினால் சமர்த்தாய் சாப்பிட்டுவிடுவார்கள்.

  அதிகம் சாப்பிடாதீர்கள்....கொலஸ்டிரால் அதிகம்...என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் அலட்சியப்படுத்திவிட்டு அப்பளத்தை மொறு மொறுவென நொறுக்கி சாப்பிடுவோர் ஏராளம். அப்படிப்பட்ட அப்பளப் பிரியர்களில் ஒருவரின் ஆதங்கம் டெல்லி வரை கேட்டிருக்கிறது. பொதுவாக, அப்பளம் வட்டமாக மட்டுமல்லாமல் சதுரமாகவும், நீள்வட்டமாகவும் என பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றது.

  இந்நிலையில், தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா என்பவர் டிவிட்டர் சமூக வலைதளத்தில் தன் மனக்குமுறலை வெளியிட்டிருந்தார். அவர், வட்ட வடிவ அப்பளங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதே சமயத்தில் சதுர வடிவ அப்பளத்துக்கு வரிவிதிப்பதால் சதுர அப்பளத்துக்கு அதிக விலை தர வேண்டியிருக்கிறது என மனம் வருந்தி குறிப்பிட்டு இருந்தார். அந்த அப்பள ரசிகரின் வேதனையை பல ஆயிரம் அப்பளப் பிரியர்கள் லைக் செய்ய, அது டெல்லி வரை அதன் ஒசை கேட்டது.


   உடனே ஹர்ஷ் கோயங்காவின் டிவீட்டை டேக் செய்த மத்திய மறைமுக வரி வாரியம், அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேண்டிலில், "வடிவத்தை பற்றியெல்லாம் எண்ணி வருத்தப்படவேண்டியதில்லை" என்றும் சதுரமோ, வட்டமோ, எல்லா வகை அப்பளங்களுக்கும் வரிவிலக்கு உண்டு எனக் கூறி வயிற்றில் பாலை வார்த்தள்ளது.  அப்புறமென்ன, வட்டமோ, நீள்வட்டமோ அப்பள ரசிகர்கள் விலையை பற்றி கவலைப்படாமல், இனி அவற்றை அச்சமின்றி வாங்கி ருசிக்கலாம்.


  Also Read : மீனவர் விரித்த வலையில் அடித்த ஜாக்பாட்... ஒரே இரவில் கோடீஸ்வரன்


  Follow @ Google News:
  கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: