தீவிரவாத அனுதாபிகள் மற்றும் தேசவிரோத எண்ணம் கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகளவு தீவிரவாத செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவுடன் கூடிய பயங்கரவாத இயக்கங்கள் எல்லை கடந்து வந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவந்ததை தொடர்ந்து காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களில் பயங்கரவாத செயல்களுக்கு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட காஷ்மீர் இளைஞரை தற்கொலைப் படையாக பயன்படுத்தியே அந்த தாக்குதலை நடத்தினர்.
Also Read:
அண்ணாமலையை சீண்டிய தயாநிதி மாறன்.. ட்விட்டரில் தந்த பதிலடி
தற்போது காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தீவிரப்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ராணுவத்தினர் மீது கல்லெறிபவர்கள், தீவிரவாத அனுதாபிகள் போன்றோருக்கு இனி அரசு வேலை கிடைக்காது, இவர்களுக்கு பாஸ்போர்ட் க்ளியரன்ஸ் செய்யப்படாது, விசா உறுதிப்படுத்துதலும் மேற்கொள்ளப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
Also Read:
குளிக்கச் சென்ற இடத்தில் பெற்றோரை பலிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் 13 வயது சிறுமி!
சட்ட ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள், கல் வீச்சு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பிற்கு பாதகமான பிற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தரப்பிலுந்து தரக்கூடிய பாதுகாப்பு அனுமதி இனி மறுக்கப்படவேண்டும் என்று காவல்துறையினர் இதர பிரிவினருக்கு காஷ்மீர் சிஐடி சிறப்பு பிரிவு காவல்துறையினர் அறிவுறுத்தியிருப்பதாக அரசின் உயர்மட்ட அளவிலான அதிகாரிகளிடமிருந்து நியூஸ் 18-க்கு தகவல் கிடைத்துள்ளது.
காஷ்மீரில் அரசு வேலை பெறுவதற்கு சிஐடி பிரிவினரிடமிருந்து அத்தாட்சிக் கடிதம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் தீவிரவாத செயல்களுக்கு துணை போபவர்களுக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கல்வி கற்கும் வகையில் காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக தீவிரவாத இயக்கங்களில் செயல்பாடு குறித்த சமீபத்திய அறிக்கை ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.