• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 100 நாள் திட்டத்திற்கு நிதி இல்லை? ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள்

100 நாள் திட்டத்திற்கு நிதி இல்லை? ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள்

100 நாள் திட்டத்திற்கு நிதி இல்லை? ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள்

100 நாள் திட்டத்திற்கு நிதி இல்லை? ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள்

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு என மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்திவிட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்தது.

    இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அக்டோபர் 29 ஆம் தேதி நிலவரப்படி, செலுத்த வேண்டிய ஊதியம் உள்ளிட்ட மொத்தச் செலவினம் ஏற்கனவே ரூ.79,810 கோடியை எட்டியுள்ளது. தமிழகம், ஆந்திரா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட, 21 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    உத்தரபிரதேசம், ஜார்கண்ட், தெலங்கானா, ஜம்மு&காஷ்மீர் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே, ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவிகிதம் அளவிற்கு கையிருப்பில் உள்ளது.

    ஆந்திராவில் 2,323 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 1,999 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும், கூடுதலாக செலவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் மாநில அரசுகள் தவித்து வருவதாகவும், ஊதியமின்றி வேலை செய்ய ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளதகாவும், சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 100 நாள் வேலைதிட்டத்திலும் ஊதியம் வழங்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

    100 நாள் வேலை திட்டத்தை தேவைக்கான திட்டமாக இல்லாமல், விநியோக திட்டத்தை போன்று மாநில அரசுகள் செயல்படுத்துவதன் காரணமாகவே, விரைவில் நிதி தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    கள அதிகாரிகளை விரைந்து நிதியை செலவிடச் செய்து மாநில அரசுகள், செயற்கையான நிதிப்பற்றாக்குறையை உருவாக்குவதாகவும் சாடுகின்றனர். ஆனால், இத்திட்டத்தின் கீழ் வேலை கோரிய 13 சதவிகித குடும்பங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக, சமூகநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனிடையே, மீண்டும் நாடாளுமன்றம் கூடினால் தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என்பதால், மழைக்கால கூட்டத்தொடர் வரை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது என்பது சாத்தியமில்லை.

    இதனால், தற்போதைய சூழலுக்கு மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியை பயன்படுத்தினால், மத்திய அரசு நிதி ஒதுக்கிய பிறகு மாநில அரசுகளின் செலவு ஈடு செய்யப்படும் என, துறைசார் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: