• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இனி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்!

இனி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்!

  • News18
  • Last Updated :
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலையில் வழங்கப்படும் லட்டுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இனி தலா 50 ரூபாய் விலையில் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான கோவிலில் தர்ம தரிசனம், ஆதார் அட்டை மூலம் அனுமதிக்கப்படும் சர்வ தரிசனம், பாத யாத்திரையாக வருவோருக்கான திவ்ய தரிசனம் ஆகியவற்றின் மூலமே பெரும்பாலானோர் தரிசனம் மேற்கொள்கின்றனர். இந்த பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறை நுழைவாயிலில் 70 ரூபாய் சலுகை விலையில் 4 லட்டுகளை வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40 ரூபாய் செலவாகும் நிலையில் சலுகை டோக்கன்களால் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே 70 ரூபாய் லட்டு சலுகை டோக்கனை முற்றிலுமாக நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்கு பதிலாக தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக லட்டு வேண்டுமென்றால் தலா 50 ரூபாய் கொடுத்து எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கோவிலுக்கு வெளியே லட்டுகள் 25 ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாயாக விலை உயர்த்தி கடந்த ஓராண்டாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: