ஆண்களுக்கு சமமாக பெண்களும் கல்வி மற்றும் வேலை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் படிப்பு படித்து முன்னேறி வந்தாலும் நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கான அடிப்படை தேவைகள் கூட இன்னும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். நகர்ப்புறங்களில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தேவையான வசதிகள் கிடைத்தாலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதி கூட இல்லாத பல பணியிடங்களில் பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
குறிப்பாக தொழிற்சாலைகள், புறநகர்ப் பகுதிகளில் பெண்களுக்கு அடிப்படை கழிப்பறை வசதி இல்லாத இடங்களிலும் நாள் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தியோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தை அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புதிய அரசாங்க உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாங்க உத்தரவை வெளியிட்டது உத்தர பிரதேச மாநில அரசாங்கமாகும். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எந்த இடத்தில், எந்த தொழிற்சாலையில், எந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் பின்வரும் அனைத்து வசதிகளும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள 10 விஷயங்கள் இங்கே
* எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் எந்த பெண் ஊழியரையும் காலை 6:00 மணிக்கு முன்பு மற்றும் மாலை 7:00 மணிக்கு பின்பு வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது
* அத்தகைய நேரத்தில் வேலை செய்ய மறுக்கும் பெண்ணை பணிநீக்கம் செய்யக்கூடாது
* மாலை 7:00 மணிக்கு பின்பு நல்லது காலை 6:00 மணிக்கு முன்பு வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வருவதற்கும் மற்றும் திரும்ப வீட்டுக்கு செல்வதற்கும் தேவையான போக்குவரத்து வசதியை இலவசமாக நிறுவனம் வழங்க வேண்டும்
* மாலை 7:00 மணிக்கு பின்பு நல்லது காலை 6:00 மணிக்கு முன்பு வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும்
* மாலை 7:00 மணிக்கு பின்பு நல்லது காலை 6:00 மணிக்கு முன்பு வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் மேற்பார்வை இருக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
* பெண்கள் வேலை செய்யும் பணியிடங்களில் அவர்களுக்கு கழிவறை, ஓய்வு அறை, உடை மாற்றும் அறை, அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
* அதேபோல ஒரு குறிப்பிட்ட பணியிடத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட டிபார்ட்மென்டில் குறைந்தது நான்கு பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என்பதும் அரசாங்க வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு பணியிடத்தில் எந்தவிதமான பாலியல் தொந்தரவும் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நிறுவனத்தின் கடமை
* பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அதை பற்றிய விவரங்களை தொழிற்சாலைகளில் ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும்
* நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் பற்றிய தகவல்களை தொழிற்சாலை ஆய்வாளருக்கு மாதாந்திர அறிக்கையாக எம்ப்ளாயர் அனுப்ப வேண்டும்
* முன்னறிவிப்பின்றி அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்படும். பெண்கள் பணியாற்ற பாதுகாப்பான இடமாக இருக்கிறதா என்பதை சரிப் பார்ப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படும்
* அரசாங்க உத்தரவில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறதா என்பதும் குறிக்கப்பட்டு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமல் இருக்கும் பொழுது நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்
Uttar Pradesh | No female worker shall be bound to work without her written consent before 6am & after 7pm; to also be provided free transportation, food & sufficient supervision, if working during the aforementioned hours: Govt pic.twitter.com/b6cSOXnJm3
உத்தரபிரதேச மாநில அரசின் இந்த அறிவிப்பு நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் இருக்கும் பெண்களில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஆதரவாக இருக்கும்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.