Home /News /national /

தொடரும் கனமழை வெள்ளம் - பெங்களூருவில் குடிநீருக்கு தட்டுப்பாடு

தொடரும் கனமழை வெள்ளம் - பெங்களூருவில் குடிநீருக்கு தட்டுப்பாடு

பெங்களூருவில் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் தடை

பெங்களூருவில் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் தடை

கர்நாடகாவில் கனமழை வெள்ள பாதிப்பு தொடர்வதால் பெங்களூருவில் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India
    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இடைவிடாது கனமழை பெய்ததால் பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஐடி நிறுவனங்கள் ரூ.225 கோடி மதிப்பில் இழப்புகளை சந்தித்துள்ளது.

    அம்மாநிலத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பெங்களூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை வெள்ளம் காரணமாக பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்களாக தடைபட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாள்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் நகர வாசிகளிடம் தெரிவித்துள்ளது.

    நிலைமையை விரைந்து சீரமைக்க மாநாகராட்சி ஆணையர் மற்றும் மாநில பேரிடர் ஆணையம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவசர வழிகாட்டுதல் வழங்கியுள்ளார். தீவிர பாதிப்புக்குள்ளான பகுதிகளில் படகுகள் உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் சென்று நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் முன்னணி ஐடி மையமாக திகழும் பெங்களூருவில் இந்த கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வழக்கமான பணிகள் மேற்கொள்வதில் கடும் அவதி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஐடி மற்றும் வங்கி நிறுவனங்களின் அமைப்பான அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ)தங்கள் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து வடிகால் வசதி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிடப்பில் இருக்கும் மெட்ரோ பணியையும் விரைந்து முடித்துத்தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஆபரேசன் மூலம் கைரேகையை மாற்றி மோசடி.. போலி பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது

    முறையான திட்டமிடல் இன்றி நகரத்தை கட்டமைக்காதது, குறிப்பாக மரங்களை அழித்ததும் முறையான வடிகால் வசதிகள் மேற்கொள்ளததுமே இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் என சூழியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இன்னும் சில நாள்களில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பால் மக்களுக்கு உண்டான அவதி தேர்தலில் எதிரொலிக்குமான என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bengaluru, Flood, Flood warning, Rain Forecast

    அடுத்த செய்தி