Home /News /national /

வேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக பதிவுகள் இல்லை: மத்திய அரசு

வேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக பதிவுகள் இல்லை: மத்திய அரசு

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்ததற்காக பதிவுகள் அரசிடம் இல்லை.  விவசாயிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பதிவுகளும் இல்லை என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் யாரும் இறந்ததாக எந்த பதிவும் இல்லை என்றும் இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தேவை எழவில்லை என்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் அணி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் சுமார் 750 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என வினா எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்ததற்காக பதிவுகள் அரசிடம் இல்லை.  மேலும், விவசாயிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பதிவுகளும் இல்லை எனவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

    அவரது பதிலுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். அவையை விட்டு வெளியேவந்த பின்னர், ஊடகத்திற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதற்கான எந்தப் பதிவும் தங்களிடம் இல்லை என்று [மத்திய அரசு] எப்படிச் சொல்ல முடியும்? இது விவசாயிகளை அவமதிக்கும் செயல்” என்று கண்டனம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Farmer protest, Parliament

    அடுத்த செய்தி