Home /News /national /

பெரோஸ்பூர் நிகழ்ச்சிக்கு கூட்டம் வராததே பிரதமர் மோடி திரும்பிச் செல்ல காரணம்: பஞ்சாப் முதல்வர் விளக்கம்

பெரோஸ்பூர் நிகழ்ச்சிக்கு கூட்டம் வராததே பிரதமர் மோடி திரும்பிச் செல்ல காரணம்: பஞ்சாப் முதல்வர் விளக்கம்

PM Modi in Punjab

PM Modi in Punjab

போராட்டக்காரர்கள் யாரும் பிரதமரின் வாகனத்தின் அருகில் கூட செல்லவில்லை என்றும், விவசாயிகள் வழிமறித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடன் பேசி பிரதமர் சமாதானப்படுத்தி இருக்கலாம் என்றும் சன்னி கூறியுள்ளார்.

    பெரோஸ்பூர் நிகழ்ச்சிக்கு கூட்டம் வராததே பிரதமர் மோடி திரும்பிச் செல்ல காரணம் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் விளக்கமளித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு விமானம் மூலம் நேற்று சென்றார். பின்னர் அங்கிருந்து ஹூசைனிவாலாவில் உள்ள தேசியத் தியாகிகள் நினைவிடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செவல்வதாக இருந்தது. ஆனால் பதிண்டாவில் நேற்று மழை பெய்தது. இதனால் மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் இயக்குவதை தவிர்த்த பாதுகாப்பு அதிகாரிகள் ஹூசைனிவாலாவுக்கு சாலை மார்க்கமாக செல்ல கடைசி நேரத்தில் திட்டமிட்டு அதை செயல்படுத்தினர்.

    ஹூசைனிவாலாவில் இருந்து 30 கிலோமீட்டருக்கு முன்னதாக பிரதமர் சென்ற பாதையில் பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமரின் கார் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவரின் நிகழ்ச்சி ரத்தானது. இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    Also read: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    உயிரோடு திரும்பி அனுப்பியதற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்படி விமான நிலைய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் வார்த்தை போர் வெடித்தது.

    இதனிடையே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோரும் இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் போனில் கேட்டறிந்தனர். இந்த சூழலில் டெல்லி திரும்பிய பிரதமரிடம் குடியரசுத்தலைவர் நேரடியாக அழைத்து நிலைமையை விசாரித்தார். பிரதமரின் விளக்கத்தை கேட்டு, குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்தார்.

    ஆனால், பிரதமர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேராததே அவர் திரும்பி செல்வதற்கு காரணம் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மீண்டும் கூறியுள்ளார். மேலும், அவர் பிரதமருக்கு எந்த வகையில் பாதுகாப்பு குறைப்பாடு இருந்தது என்பது புரியவில்லை என்றும், பஞ்சாபின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், போராட்டக்காரர்கள் யாரும் பிரதமரின் வாகனத்தின் அருகில் கூட செல்லவில்லை என்றும், விவசாயிகள் வழிமறித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடன் பேசி பிரதமர் சமாதானப்படுத்தி இருக்கலாம் என்றும் சன்னி கூறியுள்ளார். பிரதமரின் பாதுகாப்பில் சிறிது குறைப்பாடு இருந்திருந்தால் முதல் குண்டை நானே பெற்றிருப்பேன். ஒவ்வொரு பஞ்சாபியும் இதையே செய்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, Punjab

    அடுத்த செய்தி