Home /News /national /

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் விளக்கம்

 மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

  • News18
  • Last Updated :
    இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 6 நாட்களாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

    இந்தியாவுக்கு பெட்ரோலியம் வழங்கும் முக்கிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dharmendra pradhan, Iran, US-Iran Tensions

    அடுத்த செய்தி