HOME»NEWS»NATIONAL»no corona for sasikala from bangalore doctors video vai
V. K. Sasikala | சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. சசிகலா சிகிச்சை பெரும் பெங்களூரு அரசு மருத்துவமனையின் மருத்துவர் தகவல்..
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் கர்நாடக மாநிலம் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோயுடன் ஹைப்போ தைய்ராடு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தது. இந்நிலையில் காய்ச்சல் காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவும் 79 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் மூச்சுதிணறல் ஏற்படவே சிறையில் இருந்து அவசர ஊர்தியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஆக்சிஜன் உதவியுடன் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
சசிகலாவுக்கு கொரோனா இல்லை என உறுது செய்யப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், கடந்த ஒரு வாரமாக சசிகலாவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக சிறைத்துறை தரப்பில் தெரிவித்ததாக கூறினார். நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் 4.30 மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அங்கு ஆண்டிஜன் மற்றும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்று இல்லை என உறுதி ஆகியுள்ளதாக தினகரன் தெரிவித்தார். தற்போது சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் கூறினார். சசிகலாவை சந்திக்க போலீசாரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.