ஹோம் /நியூஸ் /இந்தியா /

'Go Corona, Corona Go என சொன்னேன், செல்கிறது..’ புதிய வகை கொரோனாவுக்கு புதிய முழக்கத்தை அறிவித்த மத்திய அமைச்சர்..

'Go Corona, Corona Go என சொன்னேன், செல்கிறது..’ புதிய வகை கொரோனாவுக்கு புதிய முழக்கத்தை அறிவித்த மத்திய அமைச்சர்..

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முன்னதாக 'Go Corona, Corona Go என சொன்னேன், சென்று கொண்டிருக்கிறது..’  புதிய வகை கொரோனாவுக்கு புதிய முழக்கத்தை தற்போது அறிவிக்கிறேன். ’No corona, Corona No' என்னும் புதிய முழக்கத்தை நான் அறிவிக்கிறேன் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே தெரிவித்துள்ளார்.

முந்தைய முழக்கமான 'Go corona Corona go' என்னும் முழக்கத்தை, பிப்ரவரி மாதம் அதாவ்லேகூறியிருந்தார். இந்தியாவில் தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில், மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இந்த முழக்கத்தைத் தொடங்கினார். பிரதமர் மோடியின் கோரிக்கையால் பல இந்தியர்கள் விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்திகள்,  விளக்குகள் போன்றவற்றை ஏற்றி வைத்தபோது, ​​மார்ச் 5-ஆம் தேதியிலும் அவர் இந்த முழக்கத்தை முழங்கினார்.

"கொரோனா வைரஸ் இன்னும் ஆறு-ஏழு மாதங்களுக்கு இருக்கும், ஆனால் அது ஒரு நாள் செல்லத்தானே வேண்டும். தடுப்பூசி வந்தவுடன், கொரோனா இங்கிருந்து செல்லும்" என்று அதாவ்லே ஏ.என்.ஐ செய்தி நிறுவன செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த அக்டோபர் மாதம், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Corona virus, Go corona Go, New strain of corona virus, Union Minister Ramdas Athawale