ஹோம் /நியூஸ் /இந்தியா /

கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் நிவாரணம் தர முடியாது - பீகார் முதல்வர் திட்டவட்டம்

கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் நிவாரணம் தர முடியாது - பீகார் முதல்வர் திட்டவட்டம்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தர முடியாது என முதலமைச்சர் நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India

பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் சமீப காலமாகவே அதிகம் காணப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் பலர் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல் இரு நாளிலேயே அடுத்தடுத்து 39 பேர் உயிரிழந்தனர். மேலும் , மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 11 பேர் நேற்றைய தினம் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.

அம்மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வருகின்றது.மேலும், அம்மாநில சட்டப்பேரவையில் போராட்டத்தையும், முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

ஆனால், முதலமைச்சர் நிதீஷ் குமாரோ மாநிலத்தில் மது விலக்கை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய நிதீஷ் குமார், "நீங்கள் மது குடித்தால் உயிரிழப்பீர்கள். குடித்துவிட்டு உயிரிழந்தவர்களுக்கு எல்லாம் இழப்பீடு வழங்க முடியாது. எனவே, குடிக்க வேண்டாம் என்று தொடர்ந்து உங்களிடம் கோரிக்கை வைத்து வருகிறேன்.

இதையும் படிங்க: ஆதார் இருந்தால் போதும்... நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் - மத்திய அரசு

மீண்டும் ஒரு முறை உங்களிடம் கள்ளச்சாராயம் குடிக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். அப்படி குடித்தால் மரணம் நிச்சயம். எனவே, மதுவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களால் ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை" என்றார். பீகார் மாநிலத்தில் மதுபானங்கள் விற்கவும், குடிக்கவும் தடை சட்டத்தை 2016ஆம் ஆண்டில் முதலமைச்சர் நிதீஷ் குமார் அமல்படுத்தினார்.

First published:

Tags: Bihar, Nitish Kumar