முகப்பு /செய்தி /இந்தியா / நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

2021ஆம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.

  • Last Updated :

2021ஆம் ஆண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டன. அதில் மாணவகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவ-மாணவிகளின் சுமைகளைக் குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

மேலும் படிக்க... அலர்ஜி இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது: சீரம் நிறுவனம் அறிவிப்பு 

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் 2021ஆம் ஆண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

ஜேஇஇ தேர்வை பொறுத்தவரையில் முந்தைய ஆண்டு பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும். ஆனால் கூடுதலாக விருப்பத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

top videos

    அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இருந்து தலா 30 வினாக்கள் வீதம் 90 வினாக்கள் கேட்கப்படும் என்றும், அதில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 வினாக்கள் வீதம் 75 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும் முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Jee, Neet Exam