Home /News /national /

Headlines Today : ரூபாய் நோட்டுகளில் மாற்றம் இல்லை... - தலைப்புச் செய்திகள் (ஜூன் 7, 2022)

Headlines Today : ரூபாய் நோட்டுகளில் மாற்றம் இல்லை... - தலைப்புச் செய்திகள் (ஜூன் 7, 2022)

இந்திய ரூபாய் நோட்டுகள்

இந்திய ரூபாய் நோட்டுகள்

Headlines Today : ரூபாய் நோட்டுகளில் இருக்கும் மகாத்மா காந்தியின் படம் அகற்றப்படாது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு, ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.

  இரண்டு நாள் பயணமாக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை புறப்பட்டுச் செல்கிறார்.

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு நடத்துகின்றனர்.

  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  மக்களுக்காக கலைகள் இருக்க வேண்டும் என்றும், அவற்றில் மூடநம்பிக்கையை விதைக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  ஈரோட்டை சேர்ந்த சிறுமியிடம் 3 ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக, சேலம், ஒசூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டது.

  மதுரையில் நிதி முறைகேடு செய்ததாக கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதி வலியுல்லா-வுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி-4 ஏவுகணையை பாதுகாப்புத் துறை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

  முகமது நபிகள் குறித்து பாஜக பிரமுகர்கள் கூறிய கருத்துக்கு, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  நாட்டில் போதுமான அளவுக்கு உரம் கையிருப்பில் இருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிரிட்டனில் ஆளுங்கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்றார்.

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம், இலங்கையில் கொண்டாடப்பட்டது.

  Must Read : கறிவிருந்து கச்சேரி.. திருச்சி சிவாவின் தடபுடல் பிறந்தநாள் கொண்டாட்டம் - உள்ளூர் அரசியலுக்கு அஸ்திவாரமா?

  போலி கணக்குகள் குறித்த தரவுகளை வழங்காவிட்டால், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவிலிருந்து பின்வாங்க உள்ளதாக தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள கோல்மால் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில், இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி