முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு

கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு

 கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு

கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு

உயிரிழப்பு விபரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் தடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து காங்கிரஸ் தரப்பு கேள்விகள் எழுப்பியது.

Also read:  ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விபரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றன.

உயிரிழப்பு விபரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. அந்த விபரங்களை பார்க்கும் போது எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என தெரிகிறது.

அதேநேரத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும், 2வது அலை பாதிப்பில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: BJP, Corona, Oxygen, Oxygen cylinder