• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் சம்பவம்: மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லக்கிம்பூர் சம்பவம்: மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லக்கிம்பூர் சம்பவம்: மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லக்கிம்பூர் சம்பவம்: மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லக்கிம்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிரத்தில் முழு அடைப்புப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதனால், இன்று வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

  • Share this:
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜினாமா செய்ய கோரியும் மகாராஷ்டிரம் முழுவதும் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆளும் கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தனர்.

    இதையடுத்து, இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த முழு அடைப்புப் போராட்டம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கூறும்போது, மக்களின் பெரும் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது சரியல்ல. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இந்த முழு அடைப்புப் போராட்டம் மூலம் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு பின்னர் தற்போது தான், வணிகத்திற்குத் திரும்புவதாக வணிகர் சங்கம் முன்பு கூறியது. மேலும், இந்த முழு அடைப்புப் போராட்டம் அவர்களின் வருவாயை பாதிக்கும் என்றனர். "ஊரடங்கு காரணமாக கடந்த 18 மாதங்களாக நாங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம். எங்கள் வணிகம் தற்போது தான் மெதுவாக முன்னேறி வருகிறது. பண்டிகைக் காலத்தின் இடையே, வாடிக்கையாளர்கள் கடைக்கு வரத் தொடங்கியதால், அமைதியாக எங்கள் தொழிலைச் செய்வோம். இதனால், கடைகள் திறக்கப்பட்டாலும், கடைக்காரர்கள் எந்த தாக்குதலுக்கும் உள்ளாக மாட்டார்கள் என்று  நாங்கள் நம்புகிறோம் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: