கடன்களை வசூலிக்க அடியாள்களை அனுப்ப வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை! மத்திய அமைச்சர்

உள்ளூர் போலீசாரால் குற்ற வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்கள் மட்டுமே கடன் வசூலிக்கும் முகவர்களாக வெளியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும்.

news18
Updated: July 1, 2019, 10:54 PM IST
கடன்களை வசூலிக்க அடியாள்களை அனுப்ப வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை! மத்திய அமைச்சர்
அனுராக் தாகுர்
news18
Updated: July 1, 2019, 10:54 PM IST
வராக் கடன்களை வசூலிக்க அடியாள்களை அனுப்பிவைக்கும் அதிகாரம் எந்த வங்கிக்கும் கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும், வங்கிகளின் கடன் பெற்றவர்களிடம் கடனைத் திரும்ப பெற அடியாள்களை போன்றவர்களை அனுப்பி மிரட்டி கடன்களைப் பெறும் வழக்கம் இருந்துவருகிறது. அதனால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்ற புகார்கள் எழுந்துவருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களின்போது கைகலப்புகளும் நடைபெறுவதுண்டு. சில இடங்களில் அடியாட்களின் அத்துமீறல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அணுராக் தாக்குர், ‘கடன்களை வசூலிக்க வெளிநபர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி சில வழிகாட்டி நெறிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. உள்ளூர் போலீசாரால் குற்ற வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்கள் மட்டுமே கடன் வசூலிக்கும் முகவர்களாக வெளியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும்.

அப்படி கடன் வசூலிக்க செல்லும் வெளிநபர்கள் அநாகரிகமான முறையிலும் சட்டவிரோதமாகவும் கேள்விக்குரிய வகையிலும் வாடிக்கையாளர்களிடம் நடந்துக்கொள்ள கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வராக்கடன்கள் தொடர்பாக கடன் பெற்றவர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதன் பின்னரே ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றபடி, வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பி வைக்கும் அதிகாரம் எந்த வங்கிக்கும் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...