பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடை இல்லை என இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 23, 2018, 1:55 PM IST
  • Share this:
பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது இடைக்கால உத்தரவு வழங்கியது.

உச்ச நீதிமன்றம்இதன்மூலம், காற்று மாசு அளவு 30 விழுக்காடு அளவுக்கு குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நாடு தழுவிய அளவில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கக் கூடாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல, முற்றிலும் தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என கருத்து தெரிவித்தது. இதையடுத்து, நாட்டு மக்களின் நலனையும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்வோம் என்று நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி இறுதி விசாரணையின் போது தெரிவித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ”உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி பட்டாசு தயாரிப்புக்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த நிலையில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாதுபட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது

தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரை முக்கால் மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்

அதிக சத்தம், அதிக புகை வரும் பட்டாசுகளை தயாரிக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விற்க கூடாது. உரிமம் இல்லாதவர்கள் பட்டாசு விற்பனை செய்ய கூடாது.

பட்டாசு விவகாரத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இவ்விவகாரம் பற்றி ஒரு வார காலத்திற்குள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பட்டாசு தடையையும் நீதிபதிகள் நீக்கியுள்ளனர். உச்ச நீதிமன்றம் விதித்த இந்த கட்டுப்பாடுகள் திருமணங்கள், விழா காலங்கள் என எல்லாவற்றுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பட்டாசுக்கு முழு தடை விதிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால், மிகவும் கண்டிப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கவில்லை. தீபாவளிக்கு 7 நாட்கள் முன், பின் காற்றில் உள்ள மாசுபாட்டை அளவீடு செய்ய வேண்டும்” என்று மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்வானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்..

3 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 
First published: October 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்