தடுப்பூசி போட்டும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை... நான் மோசம் போய்விட்டேன் - காவல்நிலையத்தில் இளைஞர் புகார்

தடுப்பூசி

சந்திரா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சென்று கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடி பரிசோதனை மேற்கொண்டுளார்.

  • Share this:
    கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படவில்லை என உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய பெயர் கொரோனா. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதையடுத்து அதற்கான தடுப்பு பணிகளில் மத்திய , மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

    ஜனவரி மாதத்தில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. மார்ச் மாதத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45-க்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போட அரசு அனுமதியளித்தது. இரண்டாவது அலை தீவிரமடைந்ததையடுத்து மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மே-1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்   தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

    இந்நிலையில் லக்னோவை சேர்ந்த இளைஞர் பிரதாப் சந்திரா, தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டும் தனக்கு நோய் எதிர்ப்புசக்தி உருவாகவில்லை என காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆஷியானா பகுதியில் வசித்து வரும் பிரதாப் சந்திரா டிராவல்ஸ் ஏஜென்ஸி வைத்துள்ளார். இவர் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தனியார் மருத்துவமனையில் கொரோனா கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இரண்டாவது டோஸ்க்காக காத்திருந்த சந்திரா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சென்று கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடி பரிசோதனை மேற்கொண்டுளார்.

    அந்த அறிக்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பிறகும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என்று வந்துள்ளது. மேலும் அவரது உடலில் இருந்த ரத்த தட்டணுக்கள் 3 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக குறைந்து விட்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் தான் மோசம் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    அவரது புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதாப் சந்திரா தனது புகாரில், “ தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர், மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர், ஐ.சி.எம்.ஆர். இயக்குனர், தேசிய சுகதார மி‌ஷன் இயக்குனர் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: