Home /News /national /

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டு விமானப் பயண கட்டணங்களுக்கான உச்சவரம்பு நீக்கம்.!

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டு விமானப் பயண கட்டணங்களுக்கான உச்சவரம்பு நீக்கம்.!

Image used for representation. (Photo: IANS)

Image used for representation. (Photo: IANS)

Domestic Flight Tickets | பல்வேறு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஆலோசனை நடத்தியது. அப்போது, பயணிகளுக்கான கட்டண உச்சவரம்பை நீக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கான உச்சவரம்பு என்பது ஆகஸ்ட் 31ஆம் தேதியில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், “வரையறை செய்ய்யப்பட்ட தற்போதைய உள்நாட்டு விமான இயக்கங்கள் மற்றும் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணையினபடி  விமானப் பயணங்களுக்கு இடையே இருக்கும் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் உச்சவரம்பு என்பதை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்வேறு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஆலோசனை நடத்தியது. அப்போது, பயணிகளுக்கான கட்டண உச்சவரம்பை நீக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிந்தைய காலத்தில், இந்த உச்சவரம்பு காரணமாக விமானப் போக்குவரத்து தொழில்துறையின் வளர்ச்சியில் பெரும் தடைகள் ஏற்படுகின்றன என்று சில நிறுவனங்கள் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டன. அதன்படி தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிப்பு

அடுத்த சில ஆண்டுகளில் இந்திய விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று இந்திய விமான நிலைய ஆணையரகம்  கணித்திருந்தது. அதாவது, கடந்த 2019 - 2020 காலகட்டத்தில் நாடெங்கிலும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 341 மில்லியனாக இருந்த நிலையில், 2032 - 2033 காலகட்டத்தில் இது 827 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தேவைகளுக்கு ஏற்ப விமான நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது.



21 இடங்களில் விமான நிலையங்கள் அமைக்க ஒப்புதல்

பயணிகளின் அதிக தேவைகளை கருத்தில் கொண்டு கோவா மாநிலத்தின் மோபா, மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பை, ஷீரடி, சிந்துதுர்க், மற்றும் கர்நாடக மாநிலத்தில் கலபுர்கி, விஜயபுரா, ஹாசன், சிவமோகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் டாப்ரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குஷிநகர், நொய்டா (ஜேவார் மற்றும் குஜராத் மாநிலத்தில் தோலேரா, ஹிராஸர் ஆகிய இடங்களில் க்ரீன்ஃபீல்ட் என்னும் பசுமைவழி விமான நிலையங்களை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ரயிலில் டிக்கெட் வாங்க வேண்டுமா.? ரயில்வே விளக்கம்

இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், போகபுரம், ஓர்வாக்கல்மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் துர்காபூர், சிக்கிம் மாநிலத்தி.ல் பக்யோங், கேரள மாநிலத்தில் கண்ணூர், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஹோலங்கி (இடாநகர்) ஆகிய இடங்களில் விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது.

Also Read : காதலியின் சாட்டிங் காரணமாக 6 மணி நேரம் தாமதமான விமானம்.!

எப்போது பயன்பாட்டிற்கு வரும்

நிலம் கையகப்படுத்துதல், தேவையான ஒப்புதல்கள், தடைகளை களைவது, நிதி முதலீடுகள் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் விமான நிலையங்களை திறப்பதற்கான காலக்கெடுவை அந்தந்த விமான நிலைய மேம்பாட்டாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Domestic, Flight, India

அடுத்த செய்தி